'

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்


பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

மேல்மாகணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தரம் 6 - 13 வரை நொவம்பர் 23 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவ்வறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,
3 ஆம் தவணை ஆரம்பம திகதியான நொவம்பர் 9 ஆனது  கோவிட் நிலைமைகளின் காரணமாக இரண்டு வாரங்கள் பிற்போடத் தீர்மானிக்கப்பட்டது. பாடசாலைகள் மீள ஆரம்பித்தல் தொடர்பாக சுகாதார துறையின் அறிவுறுத்தல்கள்களுக்கேற்ப, மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நொவம்பர் 23 ஆம் திகதி தரம் 6 தொடக்கம் 13 வரை பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. guruwaraya.lk


அதே போல், ஏனைய மாகாணங்களில் தனிமைப்படுத்தல் நிலைமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது. அதே போல் தரம் 1 - 5 வரை ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு தொடர்பிலான பிரயோக ரீதியிலான பிரச்சினைகளை கருத்திற் கொண்டு அவர்களுக்கும் பாடசாலை நடைபெறாது.guruwaraya.lk

நாட்டில் தரம் 6 - 11 வரையிலான தரங்களை உள்ளடக்கிய பாடசாலைகள் 6257 காணப்படுகின்றன. அதில் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்ைக 15 இலும் குறைவான பாடவாலைகள் 28.6 % காணப்படுகின்றது.  43.6 & ஆனவை 16 - 30 க்கு இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகள் உள்ள பாடசாலைகள். 

அதே போன்று, தரம் 12 - 13 உள்ள பாடசாலைகள் 2898 காணப்படுகின்றன.  இதில் 53.4 % 15  க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டதும், 16 - 30 மாணவர்களைக் கொண்டவை 36.7 % மும் ஆகும்.


இதனடிப்படையில், சமூக இடைவௌிகளை பேணி, சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி, தரம் 6 தொடக்கம் 13 வரைபாடசாலைகளை நடாத்துவதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிபர், பிரதேச சுகாதார பரிசோதகர் (PHI), கிராம அலுவலர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம் என்போர்களை உள்ளடக்கியதாக ஒரு கமிட்டியை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். கமிட்டியின் பரிந்துரைகளை உரிய வலயக் கல்வி அலுவலகங்களின் வலயக்கல்வி பணிப்பாளருக்கு சமர்ப்பிப்பதுடன், அதன் படி பாடசாலையை நடாத்தல் வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்guruwaraya.lk

ஒவ்வொரு பிரதேசங்களிலும் பாடசாலைகளை நடாத்தும் போது ஏற்படும் சவால்கள் , பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுவதால், கல்வி அமைச்சில் இருந்து கொண்டு பொது முடிவுகள் எடுப்பது பிரயோக ரீதியாக அமையாது, எனவே அதிபர் கமிட்டி மூலம் உரிய தீர்மானங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக கல்வி அமைச்சினால் சுற்று நிருபம் வௌியிடப்படும். guruwaraya.lk

கோவிட் நிலைமைகளின் காரணமாக பிற்போடப்பட்ட கல்விப் பொதுத்தராதார சாதாரண தரப் பரீட்சை 2021 ஜனவரி 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.guruwaraya.lk எனினும் மேல்மாகாண மற்றும். தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் உள்ள மாணவர்களை கருத்திற் கொண்டு, மேற்படி பரீட்சை தினத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாக எதிர்வரும் இரு வாரங்களில் முடிவுகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் சுகாதார துறையினருடன் கலந்துயைாடி, குறித்த பிரதேச தரம் 11 மாவர்களுக்கு அல்லது பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் இரு வாரங்களில் முடிவுகள் வௌிவிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். guruwaraya.lk


பாடசாலைகளை ஆரம்பிப்பதுடன் , மாணவர்களின் போக்குவரத்து தொடர்பான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைள் பற்றி எதிர்வரும் தினங்களில் ,போக்குவரத்து துறையுடன் கலந்துரையாடியதன் பின்னர் முடிவுகளை அறிவிப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.guruwaraya.lk

 (சிங்கள ஆவணத்தின் மொழிபெயர்ப்பு)