'

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான விரிவான வழிகாட்டல்கள்


பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சானது விரிவான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

கொவிட் நிலைமைகள் மத்தியில் 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பாகவே கல்வி அமைச்சு இன்று இவ்வறிககையை வௌியிட்டுள்ளது

3 வகையான அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
1. பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான விரிவான வழிகாட்டல்.
2. பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான அதிபர்களுக்கான வழிகாட்டல்
3. பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கா வழிகாட்டல்கள்

மொழிபெயர்க்கப்பட்l ஆவணம். சிக்கல்கள் இருப்பின் சிங்கள மூல ஆவணத்தை வாசிக்கவும். பிரதான விடயங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன. முழுமையான விபரங்களுக்கு சிங்கள மூல ஆவணங்களை வாசிக்கவும்


முக்கிய விடயங்கள்
1. பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான விரிவான வழிகாட்டல்.
  • மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப் பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். guruwaraya.lk
  • பாடசாலைக்கு வரும் போது, பாடசாலையினுள் மற்றும் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் வரை முகக்கவசம்  அணிவது கட்டாயம் என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்தல்.guruwaraya.lk
  • பாடசாலையினுள் நுழையும் போது உடல் வெப்பநிலையை பரிசீலித்தல் கட்டாயம்
  • பாடசாலையினுள் நுழையும் போது கை கழுவுதல் மற்றும் காலணிகள் தொற்று நீக்கம் செய்யப்படல் வேண்டும்.
  • மாணவர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வதை குறைப்பதற்காக பாடசாலையில் காணப்படும் மேலதிக நுழைவாயில்களை திறந்து பயன்படுத்தல்.
  • ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தது ஒரு பாதுகாப்புக் கவச ஆடை மற்றும் முகக்கவசம் (Face Shield) இருத்தல் வேண்டும். பாடசாலையில் கோவிட் அடையாளத்தில் மாணவர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் மேற்படி ஆடைகளை அணிந்து கொண்ட பாடசாலை ஊழியர் அம்மாணவரை பாடசாலை ஓய்வு அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும். guruwaraya.lk
  • பாடசாலை நடைபெறும் சந்தர்ப்பங்களில் வௌிநபர்களின் வருகையை முடிந்தளவு தவிர்த்தல்
  • விசேட சந்தர்ப்பங்களில் 1390 க்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளல்guruwaraya.lk
  • பாடசாலை வகுப்புகள் நடைபெறும் விதம. ஒரு வகுப்பில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்ைக
    • 15 வரை எனின்அனைத்து நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.
    • 16 - 30 எனின், இரண்டாக பிரித்து ஒரு வாரம் விட்டு மறு வாரம் வருமாறு இரண்டு பிரிவுகளுக்கும் மாறி மாறி வகுப்புகள் நடைபெறும்
    • 30க்கு மேல் எனின் மாணவர்களின் எண்ணிக்ைக 15 ஆக வருமாறு பிரித்து சம சந்தர்ப்பங்கள் வருமாறு வகுப்புகள் நடைபெறும்.
  • பாடசாலை பிரதான மண்டபம், விரிவுரை மண்டபம் போன்றவற்றில் பொருத்தமான மாணவர் இடைவௌி பேணும் வகையில் அதிக மாணவர்களைக் கொண்டு வகுப்புகளை நடாத்தலாம். இதே போன்று செமினாரகள் நடாத்தவும் அனுமதி உண்டு. guruwaraya.lk
  • மாணவர்கள் முகத்துக்கு முகம் பார்க்காதவாறு வகுப்பறை ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். guruwaraya.lk
  • பாடசாலை இடைவேளை நேரத்தை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே  நேரத்தில் வராத வண்ணம் ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
  • மாணவர்கள் உணவுகளை பரிமாறிக் கொள்வதை தவிர்ப்பதை ஆசிரியர்கள் கண்காணித்தல்
  • பாடசாலை இடைவேளைகளிலும் மாணவர்கள் தமது தனிநபர் இடைவௌிகளை பேணல் வேண்டும். முகக்கவசம் அணிதல் வேண்டும்
  • மாணவர்கள் முடியுமானவரை வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வருதல். guruwaraya.lk
  • மாணவர்கள் முடியுமானவரை பெற்றோரின் சொந்த வாகனங்களில் வரல். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் திட்டமிட்டுக் கொள்ளல்.
  • பொது போக்குவரத்து பயன்படுத்துபவராயின், அல்லது பாடசாலை போக்குவரத்து வாகனங்களில் வருவதாயின் ஆசன எண்ணிக்கைக்கு அளவாக பயணித்தல். ஏறும் போதும், இறங்கும் போதும் கைகளை செனிடைசர் மூலம் கழுவிக் கொள்ளல். முகத்தை தொடுவதை தவிர்த்தல். வாகன யன்னல்கள் திறந்த நிலையில் பயனித்தல் ஏசி யினை தவிர்த்தல். முகக்கவசம் அணிதல் மற்றும் வாகனத்தில் உணவு உற்கொள்வதை தவிர்த்தல். guruwaraya.lk
  • பாடசாலை கென்டீன்கள் மீள அறிவிக்கும் வரை திறக்கப்பட மாட்டாது.
  • பாடசாலை விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பாக பின்னர் அறிவித்தல்கள் வழங்கப்படும்.
  • ஆசிரியர்கள் கோவிட் நிலைமைகளில் இருந்து தம்மையும் , மாணவர்களையும் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளல் வேண்டும். guruwaraya.lk
  • கோவிட் நிலைமை தொடர்பாக மாணவர்களை தைரியப்படுத்தல்.
  • கோவிட் தொடர்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வழிகாட்டல்களும் ஆசிரியர்களாலிம் பின்பற்றப்படல் வேண்டும்.
  • பாடசாலை சுகாதார அபிவிருத்தி வேலைகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும். guruwaraya.lk
  • மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அவர்களின் மன தைரியத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • மாணவர்களின் இடைவௌி இருக்கும் சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அகற்ற சந்தர்ப்பம் வழங்கல்.
  • மாணவர்கள் மேலதிக முகக்கவசங்களை வைத்திருத்தல் வேண்டும்.
  • மாணவர்கள் செனிட்டைசர் கொண்டு வரலாம். guruwaraya.lk
  • தொடர்ந்து முகக்கவசம் அணிவதில் சிரமம் கொண்ட மாணவர்கள் face shield பயன்படுத்தலாம்.
  • சாப்பிடும் போது முகக்கவசத்தை கழற்றும் சந்தர்ப்பங்களில் அதை வைக்க பிரத்தியேக பை யை பயன்படுத்தல். அல்லது ஆடையில் மாட்டிக் கொள்ளல். பொது இடங்களில் வைப்பதை தவிர்த்தல். guruwaraya.lk
  • மாணவர்கள் நோய் அறிகுறிகள் இருப்பின் பாடசாலைக்கு வருவதை தவிர்த்தல்
  • வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு யாதும் ஒரு நபர் உட்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் குறித்த மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல்.
  • பீ. சீ. ஆர் அல்லது என்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்கள் குறித்த பரீட்சை பெறுபேறு வரும் வரை பாடசாலைக்கு வராதிருத்தல்.
  • தனிமைப்படுத்தல் பிரதேச மாணவர்கள் பாடசாலைக்கு வராதிருத்தல்.
  • நிகழ்நிலை கற்றலை விட, நேரடி கற்றல் வினைத்திறனானது என்பதை பெற்றோர்களை ஆசிரியர்கள் அறிவுறித்தல்.

2. பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான அதிபர்களுக்கான வழிகாட்டல்
  • 2021 06,07,08,09 மற்றும் 10 ஆம் திகதிகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோர் மட்டும் பழைய மாணவர்களை அழைத்து பாடசாலை மீள ஆரம்பித்தல் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
  • பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கடமையாற்றல் தொடர்பாக பிரதே சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் உடன் இணநை்து அறிவுறுத்தல். guruwaraya.lk
  • 15/2020 சுற்றறிக்கைக்கு ஏற்ப செயற்படல்.
  • அவசர தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கங்களை காரியாலத்தில் காட்சிப்படுத்தல் மற்றும் ஏனையோருக்கு அது தொடர்பாக அறிவுறுத்தல். guruwaraya.lk

3. பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கா வழிகாட்டல்கள்
  • ஆசன எண்ணிக்கைக்கு அளவாக மாத்திரம் மாணவர்களை அமர்த்தல்.
  • ஏறும் போதும், இறங்கும் போதும் கைகளை கழுவுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தல்.
  • யன்னல்களை திறந்த வண்ணம் பயணித்தல். guruwaraya.lk
  • ஒவ்வொரு நாளும் ஒரே குழுவினரை பயணிக்க எடுத்தல்.
  • ஒரே பாடசாலையை சேர்ந்த மாணவர்களை ஒரே வாகனத்தில் ஏற்றல்.
  • நாள்தோறும் பயணிக்கும் மாணவர்கள் தொடர்பான தகவல்களை வைத்திருத்தல். அவர்களின் தினந்தோரும் வருகை தொடர்பாக ஆவணங்கள் வைத்திருத்தல்.
  • வௌி நபர்களை ஏற்றாதிருத்தல். guruwaraya.lk
  • மாணவர்கள் காலையில் ஏறும் போது நோய் அறிகுறிகள் இருக்கின்றதா என்பதை அவதானித்தல்.
  • சாரதி , நடத்துனர் எப்போதும் முகக்கவசம் அணிந்திருத்தல்.
  • அவசர நிலைமைகளில் தொடர்பு கொள்ள வேண்டிய சுாதார துறை இலக்கங்களை காட்சிப்படுத்தல்.
  • ஒரே ஊழியர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தல்.
  • நோய் அறிகுறிகள் இருக்கும் ஊழியர்களை பயன்படுத்தாதிருத்தல்.
பின்வரும் இணைப்பில் உத்தியோகபூர்வ அறிவித்தலை பதிவிறக்கம் செய்யலாம்.